செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

எனக்கு 17 வயது இருக்கும் போது அந்த நடிகர்…?. கங்கனா ரனாவத் பரபரப்பு பேட்டி

08:00 காலை

Loading...

தனக்கு 17 வயது இருக்கும் போது பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், தான் சிறுமியாக இருந்த போது தன்னை ஒரு நடிகர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்த முயற்சி செய்தார் என பேட்டியளித்தார். ஆனால், அது யார் என அவர் அப்போது கூறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில் அது யார் என அவர் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளும், பின்னணிப் பாடகருமான ஆதித்யா பஞ்சோலிதான் அந்த நபர் என உண்மையை போட்டு உடைத்துள்ளார் கங்கனா. தனக்கு 17 வயது இருக்கும் போது அந்த சம்பவம் நடந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவரின் மகளை விட ஒரு வயது குறைவானவள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மனைவியிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன். அதன் பின் ஒருமுறை என்னை தலையில் அவர் அடித்தார். அதில் எனக்கு காயம் ஏற்பட்டது. நானும் அவரை தாக்கினேன். அதன் பின் போலீசாரிடம் புகார் அளித்தேன். என்னை விட்டு அவர் விலகியிருக்க வேண்டும் அவரை போலீசார் எச்சரித்தனர். அதன் பின் அவர் என் வீட்டிற்கு வரவில்லை” என அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 74 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com