படுக்கையை பகிர்வதால் பல பிரச்சனை – நடிகை ஓபன் டாக்

தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத்.

அதன் பின் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த குயின் படம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது.

அதோடு, செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பதிலளிப்பவர் கங்கனா ரனாவத். அதுவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார் கங்கனா.

அவர் கூறும் போது “படுக்கைக்கு அழைக்கும் சக நடிகரை நாம் ஒதுக்கும் போது அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதன் பின் அவர்களோடு நாம் நடிக்கும் சூழல் கடினமாக மாறிவிடும். அதேபோல், அவர்களுடன் படுக்கையை நாம் பகிர்ந்து கொண்டால், இன்னும் நிலைமை மோசமாகிவிடும். இந்த பிரச்சனை எல்லா இடத்திலும் இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

இவரின் இந்த பேட்டி பாலிவுட் ஹீரோக்கள் பலருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.