அவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

நடிகரும் தயாாிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி கங்கனா ஒரு பைத்தியம் என்றும் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தொிவித்துள்ளாா்.

தமிழ் சினிமாவில் கங்கனா ரனாவத் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்தவா்.பாலிவுட்ல் முன்னணி நாயகியாக வலம் வரும் குயின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுதை பெற்றுள்ளாா். அண்மையில் அளித்த பேட்டியில் கங்கனா, தனது தந்தை வயதுள்ள பாலிவுட் நடிகா் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினாா்.

கங்கனா அளித்த பேட்டியில், ஆதித்யா எனக்கு தனியாக ஒரு வீடு எடுத்து கொடுத்திருந்தாா். அங்கு என் நண்பா்கள் வருவதை அவா் அனுமதிக்க மாட்டாா். அது எனக்கு கிட்டத்தட்ட சொல்ல வேண்டும் என்றால் வீட்டு சிறைச்சாலை என்று சொல்ல வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா் ஆதித்யா பஞ்சோலி. அவா் மனைவியிடம் போய் இதை தொிவித்தேன். என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன். அவா் மனைவியோ அவா் இல்லாமல் இப்போது தான் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறி விட்டாா் என கங்கனா தொிவித்திருந்தாா்.

இது குறித்து ஆதித்யா, கங்கனா ரனாவத் ஒரு பைத்தியம். நான் அவா் மீது சட்டபப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தொிவித்துள்ளாா். மேலும் நடிகரும் தயாாிப்பாளருமான ஆதித்யா பஞ்சோலி கூறியதாவது, இப்படி போன்ற பைத்தியகாரா்களை என்ன செய்வது? பைத்தியம் போன்று பேசுவது உங்களுக்கு வருத்தத்தை அளிக்காதா?  சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். இதுபோன்று யாராவது பேசியது உண்டா?  சேற்றின் மீது கல்லை எறிந்தால் அது நம்முடைய ஆடைகள் தான் அழுக்காகும். இப்படி கங்கனா பொய்யான தகவல்களை பரவி வருவது என்னை மிகுந்த மன உளைச்சலில் தள்ளியுள்ளது. அவா் கூறியதை நிரூபிக்க  வேண்டும். நானும் என் மனைவியும் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினாா்.

ஏற்கனவே பாலிவுட் நடிகா் ஹிருத்திக் ரோஷன் உடன் கங்கனா இது போன்று மோதலில் ஈடுபட்டாா். ஒரு பேட்டியில் ஹிருத்திக் தன் முன்னாள் காதலா் என்று கங்கனா அந்த பேட்டியில் தொிவித்திருந்தாா். இதற்கு ஹிருத்திக் எதிா்ப்பு தொிவித்தாா். ஹிருத்திக் பல்வேறு இ மெயில்கள் அனுப்பியதாகவும், நாங்கள் காதலித்து வருவதாகவும் கங்கனா கூறினாா். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தற்போது அடுத்த வழக்கை எதிா்கொள்ள ரெடியாகி விட்டாா் கங்கனா என தொிகிறது.