பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. மதுரைக்கார நடிகையான இவர் நடித்த ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு இவருக்கும் அமெரிக்காவை சேர்ந்த இஞ்சினியர் ராமகிருஷ்ணனை திருமணம் செய்தார்.

தனது மகன் இதய நோயிலிருந்து மீண்ட சம்பவம் குறித்து அவர் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்.  அமெரிக்க மருத்துவமனையில் எனக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது இருந்தாலும் குழந்தை இருதயம் பலவீனமாக உள்ளதால் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள். என்னால் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டேன்.

இதையும் படிங்க பாஸ்-  துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அது வெற்றி அடைந்தாலும் குழந்தை நல்ல நிலைக்கு வர நீண்ட காலம் பிடிக்கும் என்றனர். நான் சாய் பாபா பக்தை. முதன்முறையாக என் குழந்தையின் உயிரை காக்கும்படி வேண்டினேன்.

இதையும் படிங்க பாஸ்-  பாயும் புலியா? பயந்து ஓடும் புலியா? விஷால் குறித்து சேரன் விமர்சனம்

கடைசியாக 50 நாள் கழித்துதான் என் குழந்தையை ஐசியுவில் பார்த்தேன். உடலில் ஒரு இன்ச் இடம்தவிர எல்லா இடத்திலும் ஊசி குத்தப்பட்டிருந்தது. 2 மாதம் ஐசியூவில் சிகிச்சை பெற்ற பிறகு அவன் பிழைத்தான்.

என் மகனுக்கு சாய் ரிஷி என பெயரிட்டிருக்கிறேன். அந்த கடினமான தருணத்தை கடந்து வந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது. இவ்வாறு கனிகா கூறினார்.