கன்னட சினிமாவில் பிரபல நடிகர் துனியா விஜய். இவருக்கு நாகரத்னா என்பவருடன் திருமணமாகி மோனிஷா, மோனிகா என இருமகள்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் துனியா விஜய் கடந்த 2016ஆம் ஆண்டு மாடல் அழகியும் சாஃப்ட்வேர் என்ஜீனியருமான கீர்த்தி கவுடாவை காதலித்து பின் திருமணம் செய்துகொண்டார். பின்பு விஜய் இவருடனேயே வாழ்ந்து வந்தார் என தெரியவந்தது.

இதனால் விஜய் மனைவிகளான நாகரத்னாவுக்கும், கீர்த்திக்கும் நீண்ட நாளாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில் நாகரத்னா தன் இருமகள்களுடன் கீர்த்தி வீட்டிற்கு சென்று விஜய்யை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் நடிகர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் காயமான கீர்த்தி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த நாகரத்னாவை போலீசார் கைது செய்துள்ளனர். தான் செய்த தவறுக்காக தன் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நாகரத்னா கேட்டுக்கொண்டதால், காவல் துறை அவர்கள் இருவரையும் விட்டுவிட்டனர் என தெரியவந்துள்ளது.