சினிமாத்துறையில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரபல கன்னட நடிகர் ஒருவர் மீது இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்த புகாரை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் சுப்ரமண்யா. இவர் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண்ணை திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்து சென்றாராம். ஆனால் வேறு இடத்திற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது.

மயக்கம் தெளிந்த எழுந்த அந்த இளம்பெண், நடிகர் சுப்ரமண்யா மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து தெரியவந்ததும் நடிகர் சுப்ரமண்யா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சுப்ரமண்யாவை தேடு வருவதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.