அரசியலுக்குள் நுழைவதற்காகத்தான் நடிக்கவே வந்தேன்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் உபேந்திரா. கன்னடத்தில் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சத்யம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில், நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கப்போவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அரசியலில் இறங்குவது குறித்து தனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தார்களோடு கலந்துபேசித்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது,  சிறுவயதில் இருந்தே எனக்கு அரசியலில் ஈர்ப்பு அதிகம். எனவே, அரசியலுக்கு வரும் எண்ணத்தில்தான் நடிக்கவே வந்தேன். சிறு வயதில் நான் சொன்ன கருத்துக்களை யாரும் ஏற்கவில்லை. எனவே, சமுதாயத்தில் பெரிய ஆளாக இருந்தால்தான் நாம் சொல்வது எடுபடும் என்பதை புரிந்துகொண்டுதான் சினிமாவுக்குள் நுழைந்தேன்.

அரசியலில் இறங்குவது குறித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தேன். அதன்பிறகே கட்சி தொடங்கும் முடிவை எடுத்தேன். நிறைய அரசியல் தலைவர்கள் எனக்கு பிடித்தாலும், அவர்களின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது எனவே தான் தனி அரசியல் கட்சி தொடங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Recent Posts

அனிதா எம்.பி.பி.எஸ் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி தற்போது உருவாகியிருக்கும் பெரும் குழப்பம்..!!

கடந்த வருடம் நீட் தேர்வில் தோல்வி அடைந்தத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. அவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில்… Read More

9 mins ago

சிறையில் வாடும் சிதம்பரத்தை வாழ்த்தி போஸ்டர் …பிறந்த நாள் கொண்டாடிய தொண்டர்கள்…!

தேசத்தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் செல்வாக்குடன் பிறந்தவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். அப்படி தமிழகத்தில் கொடைவள்ளலாகவும், கல்வி வள்ளலாகவும் அறியப்பட்டவர் சர். அண்ணாமலை செட்டியார். அவரது பேரன்தான்… Read More

24 mins ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

தாம்பத்திய உறவு தான் மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அப்படி பட்ட தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதேபோல உறவில் ஈடுபடும் போது கணவன்… Read More

32 mins ago

60-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்த தூர்தர்ஷன் -34 செயற்கைக்‍கோள்களுடன் சேவைபுரிந்து வருகிறது தூர்தர்ஷன்

மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்‍காட்சி தொடங்கப்பட்டு 60வது ஆண்டில் அடியெடுத்து வைக்‍கிறது. இதையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகளுக்‍கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம்… Read More

42 mins ago

அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருகின்றன – நிர்மலாதேவியின் வழக்கறிஞர் புகார் !

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், நீதிமன்ற வளாகத்தில்… Read More

54 mins ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

ஈரானில் பெண்களுக்கான குறைந்தபட்ச வயது  13 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வயதைப் பூர்த்தி செய்த பெண்களை ஆண்கள் அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால்… Read More

1 hour ago