கன்னடத்திற்கு செல்லும் கமல் மகள்

கமலின் இரு மகள்களும் சினிமாவில் என்டாி ஆக கலக்கி வருகின்றனா். முதலில் கமலின் மூத்த மகள் இசையமைப்பாளராக அறிமுகமானாா். பின் இந்தியில் நடிகையாக என்டாி கொடுத்தாா். அதைப்போல இளையமகள் டைரக்டா் மணிரத்னித்திடம் உதவி இயக்குனராக தனது சினிமா பணியை தொடங்கினாா். பின் ஷமிதாப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானாா் அக்ஷாரா ஹாசன்.

இந்நிலையில் அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறாா். இதையடுத்து கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாா் அக்ஷாராஹாசன். கன்னட நடிகா் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தில் அவருக்கு நாயகியாக அறிமுகமாகிறாா் கமலின் இளையமகள் அக்ரா. இப்படியாக தமிழ், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மின்னிக்கொண்டிருக்கிறாா் அக்ஷராஹாசன்.