பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் உருவாகும் ‘கண்ணே கலைமானே’ என்ற திரைப்படம் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக திட்டமிட்டபடி சரியாக நடைபெற்றதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது

இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி, தமன்னா, சீனுராமசாமி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லி விடைபெற்றனர். உதயநிதியுடன் நடித்த அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்ததாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பிரிவது வருத்தமாக இருப்பதாகவும் தமன்னா கூறியுள்ளார்.

‘ ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து வேலைநிறுத்தம் முடிந்த பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்