கர்நாடகாவில் ஆட்சியமைக்கவுள்ள மஜத, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு புதிதாக கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி, ரஜினியை நக்கல் செய்யும் விதமாக பதில் அளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, கர்நாடகத்தல் புதிதாக அமைய உள்ள மஜத, காங்கிரஸ் கூட்டணி உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என ரஜினி விரும்பினால் அவர் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளின் நீர் மட்டத்தை நேரில் பார்த்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் ரஜினியே அணையை திறந்து விடட்டும், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என கிண்டலடிக்கும் விதமாக கூறினார்.