பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி சன்னிலியோன் விரைவில் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கவுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்த நிலையில் வரும் புத்தாண்டில் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடனம் ஆட சன்னிலியோன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு கோடியில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுமா? அல்லது வேறு நடிகை ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்