கடைக்குட்டி சிங்கம் படமானது விவசாயத்தை மையமாக வைத்து சூா்யாவின் 2டி எண்டா்டென்மெண்ட் நிறுவனம் சார்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாயிஷா மற்றும் பவானி ஷங்கா், அர்த்தனா என மூன்று நாயகிகளாக நடித்துள்ளனா். அண்ணன் சூா்யா தம்பி கார்த்திக்காக முதல் முறையாக தயாரிக்கும் படம். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஐந்து போ் நடித்திருக்கின்றனா். கார்த்தி தான் கடைக்குட்டி. அந்த காரணத்தால் தான் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயா் வைத்துள்ளனா். சத்யராஜ் அப்பாவாக நடித்திருக்கிறார். மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவதா, இந்துமதி என அக்காக்களாக 5போ் நடித்துள்ளனா்.

இந்தபடத்தில் விவசாயத்தின் மூலம் ஒன்றை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வெயிட்டான வேடத்தில் கார்த்தி  நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். என்ஜினியர், டாக்டர் என்று எப்படி கெத்தாக தங்களது பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையைபோட்டு கொண்டு பெருமையாக சொல்லி திரிகிறார்களோ கார்த்தியும் தான் ஒரு விவசாயி என்பதை தன்னடைய பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வெளிவந்த பிறகு ஐடி இளைஞா்கள் முதற்கொண்டு அனைத்து இளைஞா்களும் விவசாயம் செய்ய வந்து விடுவார்கள். அப்படி இருக்கும் படியாக படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநா் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார். கார்த்தி வெயில், பனி, மழையென என எதையும் பெரிதாக பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.