தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிவிட்ட கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

கார்த்தியின் 17வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் நடிகர், நடிகையர், இயக்குனர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.