பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மிக வெற்றிகரமாக ஓடிவருகிறது மிக நீண்ட நாள் கழித்து வரும் ஒரு மிகப்பெரிய குடும்பசித்திரம் எனவும், விவசாயத்தை போற்றி வளர்த்த படம் எனவும் துணை ஜனாதிபதி அவர்களால் கூட பாராட்டப்பட்டது.

இந்த படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. படத்தின் ஒரு காட்சியில் கார்த்தி பேசிய ஒரு அருமையான வசன காட்சியை பாண்டிராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

இந்த காட்சியை வெளியிட்ட சில மணி நேரத்திற்குள் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.