ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தார்.

லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்திலே மடக்கிய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைதுக்கு பின்னர் அவர் விசாரணைக்காக சென்னையில் இருந்து டெல்லி அழைத்து செல்லப்படுகிறார். இன்று மாலை அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது

இதையும் படிங்க பாஸ்-  9 முறை திருமண மாப்பிள்ளை... பல கோடி மோசடி.. சிக்கிய வாலிபர்...

கடந்த 16ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று கார்த்தி சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.