Karthick Naren – இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

துருவங்கள் பதினாறு படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதன்பின், நரகாசுரன் படத்தை இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து நடிகர் அருண் விஜயை வைத்து ஒரு க்ரைம் திரில்லர் படத்தை அவர் எடுக்கவுள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் அவர் நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்னாடி’ என்கிற படத்தில் கார்த்திக் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை கார்த்திக் ராஜு என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.