Home சற்றுமுன் கார்த்திக் நரேன் ட்விட்டரில் வெளியிட்ட நாகரசூரன் டிரைலர்

கார்த்திக் நரேன் ட்விட்டரில் வெளியிட்ட நாகரசூரன் டிரைலர்

கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இளம் இயக்குநரான இவர் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கி தன் முத்திரையை பதித்தார். சினிமா உலகமே அவரை பார்த்து ஆச்சரியப்பட்டது. இந்த இளம் வயதில் இப்படியொரு திரைக்கதையை வடிவமைத்த அவரது திறமையை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். தற்போது இவர நரகாசூரன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தற்போது நரகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்தசாமி, சந்தீப் கிஷன், ஆத்மிக உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. நரகாசூரன் படமானது வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவித்தார்கள்.இந்த படமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அரவிந்தசாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் மேனனின் ஓண்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கியமாக பாடல்களே இல்லை என்பது ஹைலைட்.