கமல் பாணியில் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் மெளனப்படம்

உலக நாயகன் கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ‘பேசும் படம்’ என்ற படத்தில் வசனமே இருக்காது. இந்த படம் அந்த காலத்திலேயே நல்ல வெற்றியை பெற்றாலும் அதற்கு பின்னர் யாரும் இதுபோன்ற முயற்சியை எடுக்கவில்லை

இந்த நிலையில் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ‘மெர்க்குரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திலும் முழுக்க முழுக்க வசனங்களே இல்லையாம்

திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ரம்யா நம்பீசன் மற்றும் சனாரெட்டி நாயகிகளாக நடித்து வருகின்றனர். பிரபுதேவா முதன்முதலாக வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.