சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் நாளை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை இயக்கவிருந்த நிலையில் திடீரென ரஜினி படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ், தனுஷூக்கு கூறிய கதையைத்தான் கொஞ்சம் ரஜினிக்கு தகுந்தவாறு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்