பேட்ட படத்திற்காக ரஜினி பேசிய டப்பிங் வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. இப்படத்தில் பழைய துள்ளலான ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் காட்டியதால் இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரஜினி பஞ்ச் டயாலாக் பேசி நடிப்பதையே அவரின் ரசிகர்கள் பெரும் விரும்புவார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் படங்களில் பஞ்ச் வசனங்கள் இடம் பெறவில்லை. எனவே, பேட்ட படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில், பேட்ட வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தில் வில்லனிடம் ரஜினி பேசும் டப்பிங் வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை ஒரு வெற்றிபடமாக ஆக்கியதற்கு நன்றி என தெரிவித்துவிட்டு, தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் எனக்கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பேட்ட படத்தின் பின்னணி இசையை நேற்று அனிருத் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.