பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை அடுத்து தற்போது ‘மெர்க்குரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ‘மெர்க்குரி’ படத்தின் ரிலீஸ் தேதியை கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபுதேவா, சனத்ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், ரம்யா நம்பீசன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படம் கமல்ஹாசனின் ‘பேசும் படம்’ படத்திற்கு பின்னர் வசனமே இல்லாமல் வெளிவரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.