மாயவன்’ படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கி வரும் படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹீரோயினை மையப்படுத்தி இந்த கேங்ஸ்டர் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் கதாநாயகியாக சாய் பிரியங்கா ருத் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் வேலு பிரபாகரன், நரேன், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள் நடித்துள்ளனர். இதனை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமாரே தயாரிக்கிறார்.

இதற்கு ஹரி தஃபுசியா இசையமைத்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தின் சிங்கிள் ட்ராக்கை ‘பேட்ட’ பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

_ சிவா விஷ்ணு