விஜய் ரசிகர்களுக்கும் நடிகர் கருணாகரனுக்கும் லேசாக வெடித்த வார்த்தைப்போர் பெரிய அளவில் வெடித்து தீராத பிரச்சினையாக்கி விட்டது. கருணாகரன் முதலில் விஜயின் பேச்சை விமர்சனம் செய்ய விஜய் ரசிகர்கள் சண்டைக்கு போய் இறுதியில் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் லெவலுக்கு போய் விட்டனர்.

அதற்கு பிறகும் கருணாகரன் சர்க்கார் படம் தமிழ் பெயரா என கேட்டு அதிர வைத்தார். மேலும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக தனக்கு ஆதரவாக பேசும் ரசிகர்கள், தவறான வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் கருணாகரன்.