விஜய் மீது கோபமாக ட்வீட் போட்ட கருணாகரன்- காரணம் என்ன?

திரைப்படங்களை ஒளிபரப்பும் க்யூப் டிஜிட்டல் நிறுவனம் அதிகப்படியான கட்டணம், திரையரங்க டிக்கெட் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கம் மார்ச் 1ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் புது படங்கள் ரீலிஸ், படப்பிடிப்பு என அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினக்கூலி தொழிலாளா்கள் உட்பட அனைவரையும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இதற்கு ஒரு சில தயாரிப்பாளா்கள் இந்த படங்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு அனுமதி என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் நடிகா் கருணாகரன் இது தொடா்பாக தமிழன்னு சொன்னா திமிர் ஏறும் என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும் தானா? எனக் கேட்டு தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமையை காப்பாற்றாமல் படப்பிடிப்பு நடத்துவதாக அர்த்தம் படும் வகையில் இந்த ட்விட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதுபோல ஸ்டரைக்கின் போது விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக வந்த செய்தியை வைத்து நகைச்சுவையாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டிருந்தார். அதில் எஸ்.ஜே.சூர்யா புகைப்படத்தை போட்டு ஸ்ட்ரைக் இருக்கு… ஆனா இல்ல எனக்குறிப்பிட்டுள்ளார்.

விஜய் ரசிகா்கள் கருணாகரனின் ட்வீட்டுக்கு எதிராக கடும் கோபத்தில் விமர்சித்து வருகின்றனா். ஒரு சில ரசிகா்கள் காதால் கேட்கமுடியாத வார்த்தைகளால் கருணாகரனை திட்டி வருகின்றனா். விஜய் ரசிகா்கள் மத்தியில் கருணாகரன் ட்வீட் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை கலாய்க்கும் வகையில் இந்த ட்வீட்டை கருணாகரன் போட்டாரா அல்லது வேறும் ஏதும் உள்ளதா என்பதற்கு அவரே பதில் அளித்தால் தான் விஜய் ரசிகா்களின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.