திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிகாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை மெரினா அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஹெச்.ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தமிழக அரசு கூறியதை அடுத்து நீதிமன்றத்தில் அரசுடன் மல்லுக்கட்டி திமுக தரப்பு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவை பெற்றது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியை விட்டு விளாசிய சத்தியராஜ்: ஆன்மீக அரசியல் என்பது பிசினஸ்!

இதனையடுத்து மெரினாவில் கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்ய ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. ராஜாஜி ஹாலில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் 4.30 மணிக்கு ஊர்வலமாக மெரினாவில் அவர் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்துக்கு எடுத்துசெல்லப்பட உள்ளது.