திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அழுதபடியே வெளியேறி கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றனர். அந்த பகுதியை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.