திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிஐடி காலனி இல்லத்துக்கு சென்ற கருணாநிதி, அங்கு கேக் வெட்டி துணைவியாரின் பிறந்தநாளை கொண்டாடினார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட முரசொலி பவள விழா அரங்கம், அண்ணா அறிவாலயம், மகன் தமிழரசுவின் இல்லம், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லம் என வரிசையாக சென்று வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  இடைத்தேர்தலில் திமுக தோல்வியை தழுவும்: மு.க.அழகிரி ஆரூடம்!

வீட்டிலேயே இருக்கும் கருணாநிதிக்கு புத்துணர்வு ஏற்பட மு.க.தமிழரசுவின் பேரனை அழைத்து வந்து அவருடன் விளையாட வைக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மு.க.தமிழரசு இல்லத்துக்கு சென்ற கருணாநிதி அடுத்த நாளே கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பினார்.

இதையும் படிங்க பாஸ்-  அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க - உளறிக்கொட்டிய ராமதாஸ்

இந்நிலையில் நேற்று கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்த நாள் என்பதால் அவரது சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார் கருணாநிதி. அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார் ராஜாத்தியம்மாள். பின்னர் அவருக்கு பிறந்தநாள் என்பதால் கேக் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  கடைசி நேரத்துல ஹீரோ மாதிரி வந்துருக்கேன் – அதிமுகவிலும் வேலையைக் காட்டிய ராதாரவி !

சிரித்தபடியே கேக்கை வெட்டிய கருணாநிதி ராஜாத்தி அம்மாள் பிறந்தநாளை அவருடன் கொண்டாடினார். வீட்டிலேயே இருந்து வந்த கருணாநிதி தற்போது வெளியே பல இடங்களுக்கு சென்று வருவது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.