நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும்,கடந்த ஜூலை 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.சில மாதங்களுக்கு பிறகு இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.                   

        திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார்.மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.