தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அடுத்தடுத்து வரும் மருத்துவ அறிக்கைகளும் அவரது உடல்நிலை குறித்து கவலைக்கிடமாகவே சொல்கிறது.

கருணாநிதியின் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் தமிழகம் உச்சக்கட்ட பரபரப்பு நிலையில் உள்ளது. திமுக தொண்டர்கள் அழுதபடியே காவேரி மருத்துவமனை நோக்கியும், கோபாலபுரம் நோக்கியும் செல்கின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அழுதபடியே மருத்துவமனையில் இருந்து வெளியேறி காரில் செல்கின்றனர். கருணாநிதியின் மூத்த மகள் செல்வி மருத்துவமனையில் இருந்து வெளியேறி கோபாலபுரம் திரும்பினார். அவர் கோபாலபுரம் வீட்டிற்குள் கதறியபடியே சென்றார். தமிழக அரசும் தயார் நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.