திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தை ஏழைகளுக்கு மருத்துவமனையாக அமைக்க கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே தானமாக அளித்துள்ளார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் ஆயுட்காலத்துக்குப் பிறகு, கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திட்டார்.

கருணாநிதி கடந்த 1968-ஆம் ஆண்டு தனது கோபாலபுரம் இல்லத்தை மகன்கள் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தமிழரசு பெயரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் கடந்த 2010-ஆம் ஆண்டு தனது 86-வது பிறந்தநாளை கோபாலபுரம் இல்லத்தில் கொண்டாடினார். அப்போது அந்த இல்லத்தை ஏழைகளுக்கு மருத்துவமனையாக அமைப்பதற்கு கருணாநிதி தானமாக வழங்கினார்.

மகன்கள் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தமிழரசுவின் ஒப்புதலின் படி கோபாலபுரம் இல்லத்தை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கினார் கருணாநிதி.