திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்தது உலகிலேயே கலைஞர் கருணாநிதி மட்டும் தான். சுய மரியாதையுடன், பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு கருணாநிதி கற்பித்தார்.

மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி திமுகவை வழிநடத்த விட்டுச்சென்றுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை என்று ஆவேசமாக பேசினார்.