வாஜ்பாய் குறித்து கருணாநிதி அன்று என்ன சொன்னார் தெரியுமா?

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் இந்திய பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.

பல்வேறு கட்சி தலைவர்களின் நன் மதிப்பை பெற்ற வாஜ்பாயின் மறைவிற்கு கட்சி பாகுபாடின்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்களில் கூட அவரது மறைவிற்கு விடுமுறை அளித்துள்ளனர்.

இந்நிலையில் வாஜ்பாய் குறித்து பல தலைவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட வாஜ்பாய் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து திமுகவுடன் அவரது நட்பு குறித்து சிலாகித்தார்.

இதற்கு காரணம் பாஜகவுக்கும் திமுகவுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் வாஜ்பாய் தலைமை வகித்தபோது, கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து அவரை வெற்றி பெற செய்தது திமுக. அப்போது திமுக தலைவர் கருணாநிதி, தான் வாஜ்பாயை எவ்வளவு மதிக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில், பாஜக என்னும் கெட்ட மரத்தினில் ஒரு நல்ல கனி தான் அடல் பிகாரி வாஜ்பாய் என குறிப்பிட்டார்.