திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மாலை இயற்கை எய்தினார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருணாநிதியின் குடும்பத்துக்கு மிகப்பெரிய வேதனையான செய்தியாக மாறியது அவரது மறைவு.

உடல்நலக்குறைவால் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது மறைவிற்கு ஒரு நாள் முன்னர் 6-ஆம் தேதி அவரது மனைவி தயாளு அம்மாள் வந்து பார்த்துவிட்டு சென்றார். அப்போது நான் இங்கேயே உட்கார்ந்து அவரை பார்த்துக்குறேன் என அடம்பிடித்தார். ஆனால் அவரை ஸ்டாலின் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க பாஸ்-  கருணாநிதியின் திருவாரூர் தொகுதி யாருக்கு: திமுகவில் மீண்டும் அழகிரி?

அதன் பின்னர் அடுத்த நாள் மாலை 6.10 மணியளவில் கருணாநிதி மரணமடைந்தார். அவரது மரணம் தயாளு அம்மாளுக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர் தற்போதுவரை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அழுதுகொண்டே இருக்கிறாராம்.

இதையும் படிங்க பாஸ்-  மிகவும் கவலைக்கிடம்: புதிய அறிக்கையால் பெரும் சோகத்தில் திமுகவினர்!

துர்கா ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளுடன் அதிக நேரம் இருந்து அவருடன் பேசி வருகிறார். அவரு போய்ட்டாரா, போய்ட்டாரா? வந்துடுவாருன்னு நினைச்சேன் என சொல்லி புலம்பி அழுதபடியே இருக்கிறாராம் தயாளு அம்மாள். துர்கா ஸ்டாலின் தான் அவரை முடிந்தவரை தேற்றி வருகிறார்.