திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடந்து வருகிறது. சென்னை ராஜாஜி அரங்கில் இருந்து அவரது இறுதிப் பயணம் தொடங்கியுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. கண்ணீர் கடலில் உடன்பிறப்புகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.

உடன்பிறப்புகளின் கண்ணீரில் சூரியனே நனையும் அளவுக்கு உள்ளது கூட்டம். வழியெங்கும் தொண்டர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் திமுக தலைவர் கருணாநிதியை வழியனுப்பி வைக்கின்றனர்.