திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடன் அனைத்து மேடைகளிலும், அனைத்து இடங்களிலும் ஒரு மனிதர் இருப்பார். கருணாநிதிக்கு எல்லாமே இவர் தான். அவரது உதவியாளர் சண்முகநாதன் இல்லாமல் கருணாநிதி எங்கும் செல்ல மாட்டார். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம். கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் சண்முகநாதன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என பலருக்கும் சந்தேகம் வரலாம்.

இதையும் படிங்க பாஸ்-  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்றில் தினகரன் முன்னிலை

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் கருணாநிதி இறந்த பின்னர் தற்போதும் தினமும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துவிடுகிறார். ஆம் கருணாநிதிக்கு உதவியது போல தற்போது ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருக்கிறார் சண்முகநாதன்.

முன்னர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க யார் வந்தாலும், மனுவை வாங்கியதும் சண்முநாதனிடம் தான் கொடுப்பார் கருணாநிதி. தற்போது ஸ்டாலினை பார்க்க வருபவர்கள் கையில் மனுவுடன் வருகின்றனர். அதை வாங்கிய ஸ்டாலின், உள்ளே கொடுத்துடுங்க என கை நீட்டிக் கட்டுகிறார். அவர் கைநீட்டிய இடத்தில் இருக்கிறது சண்முகநாதன் அறை.

இதையும் படிங்க பாஸ்-  17 மாநிலங்களில் பூஜ்யம் – முடிகிறதா காங்கிரஸ் அத்தியாயம் !

கருணாநிதி மறைவுக்குப் பின்னரும் அவரது செயலாளர்களான சண்முகநாதனும், ராஜமணிக்கமும் வழக்கம் போல கோபாலபுரத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஸ்டாலினுக்காக தயாராகும் அறிக்கையில் சில திருத்தங்களை செய்து தருகிறார் சண்முகநாதன். அவர்கள் இருவரும் அதே அறையில் இருக்கட்டும், அவங்களை எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். இதனால் தினமும் கோபாலபுரத்துக்கு வழக்கம் போல வருகிறார்கள்.