முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு திருவாடணை தொகுதி எம்எல்ஏவாகினார். அவர் தற்போது திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை எதிர்த்து வருகிறார்.

நடிகர் கருணாஸ் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா அணியுடன் சேர்ந்து கூவத்தூரில் இருந்தார். ஆனால் தற்போது திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை கடுமையாக எதிர்த்தும், நேரடியாக விமர்சித்தும் வருகிறார். சமீபத்தில் திமுக அண்ணா அறிவாலயத்தில் நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுகவை விமர்சித்தார்.

இதன் மூலம் கருணாஸ் அடுத்த தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாஸும் திமுக கூட்டணியை முடிவு செய்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் கருணாஸ் மீது என்ன சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யலாம் என ஆளும் தரப்பு ஆலோசிக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் எதாவது ஒரு சம்பவத்தில் கருணாஸ் மீதும் வழக்கு பாயலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.