முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நடிகர் கருணாசுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் இரட்டை இலை பெயரிலேயே நின்று ஜெயிக்க இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி கொடுக்கப்பட்டது. அதில் நின்று ஜெயித்த கருணாஸ் ஜெ மறைவுக்கு பிறகு தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் கருணாஸ்.

ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வ நடந்த ஒரு கூட்டத்தில் எடப்பாடியை மிக மோசமாக பேசியதாக கருணாஸ் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடியை நான் வாடா போடா என்றுதான் சொல்வேன் என்றும், சின்னம்மா குரூப் போட்ட பிச்சைதான் எடப்பாடி முதல்வர் பதவி என்றும், தனது தொண்டன் கொலை செய்யலாம், ஜெயிலுக்கு போகலாம் அவனை நான் காப்பேன் அவனது குடும்பத்துக்கு என்ன தேவையோ நான் வாங்கி கொடுப்பேன் பாத்துக்குவேன் என எல்லாமே சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.

இது குறித்து சமூகவலைதளங்களில் வைரலாக கருணாஸின் வீடியோ பரவுவதால் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.