நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க நாடார் சங்கத்தை சேர்ந்த ஹரி என்பவர் மனு கொடுத்துள்ளார்.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ்
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்தார். தனது முக்குல்த்தோர் புலிப்படை ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார். பல ஜாதியை அவர் விமர்சித்தும் பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின் நேற்று மாலை கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கீழ்த்தரமாக பேசிய கருணாஸை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க நாடார் சங்கத்தை சேர்ந்த ஹரி என்பவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க பாஸ்-  காலா படத்துக்கு தமிழகத்தில் தடை? ரஜினிக்கு எதிராக நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு!