‘கருப்பன்’ ஜல்லிக்கட்டு படம் இல்லை – விஜய் சேதுபதி

ஆர். பனீர்செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி முழுவதும் கிராமப்புற பின்னணியில் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கும் படம் ‘கருப்பன்’. இதன் கதைப் பின்னணியின் காரணமாக இது ஒரு ஜல்லிக்கட்டு போராட்டதை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ‘கருப்பன்’ ஜல்லிக்கட்டு பற்றிய படம் இல்லை என்று சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் விஜய் சேதுபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதைப் பற்றி விஜய் கூறுகையில், “இந்தப் படம் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையை மையமாகக் கொண்டது இல்லை. நான் ஜல்லிக்கட்டு வீரனாக நடித்தாலும், இந்தப் படம் தமிழ் காலாச்சாரத்தை மையமாகக் கொண்டது, நாயகனின் பெயர் ‘கருப்பன்’, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அடையாளம் இந்த கருப்பன்” என்றார்.

இதில் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். ஆனால் பாபி இதில் பொதுவாக படங்களில் பார்க்கும் வில்லனாக இல்லாமல் வேறுபட்ட கோணத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் கிட்டத்தட்ட அரை டஜன் திட்டங்களில் பிஸியாக இருக்கிறார். “96”, “அநீதி கதைகள்”, “ஜங்கா” மற்றும் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” ஆகிய படங்களில் நடிக்கிறார்.