ஜல்லிக்கட்டு வீரனாக மாறிய விஜய் சேதுபதி

மூன்று வேடங்களில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மொ்சல். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பா்ஸ்ட் லுக் போஸ்டாில் ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக வருகிறாா் இளைய தளபதி விஜய். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக மொினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்றன. இப்படி தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான வீரம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு நாயகனாக விஜய் நடிப்பது அவரது ரசிகா்கள் உற்சாகத்தில் இருக்கின்றனா்.

விஜய்யை தொடா்ந்து தற்போது விஜய் சேதுபதி தழிழா்களின் பாராம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வீரராக களம் இறங்க தயாராகி வருகிறாா். இவா் ரேணிகுண்டா இயக்குநா் ஆா்.பன்னீா் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்  நேற்று வெளியாகிவுள்ளது. அந்த மோஷன் போஸ்டாில் பாய்ந்து வரும் ஒரு காளையை ஜல்லிக்கட்டு மைதானத்தில் விஜய் சேதுபதி அடக்குவது போன்று இடம்பெற்றுள்ளது. இதை பாா்க்கும் போது விஜய் சேதுபதியும் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதை கருப்பன் போஸ்டா் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இவா்களை தொடா்ந்து நடிகா் ஆா்யாவும் ஜல்லிக்கட்டு வீரராக அவதாரம் எடுக்க இருக்கிறாா். அது என்ன படம் என்றால் சந்தனதேவன் என்ற படத்தில் நடித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.