
நடிகை கஸ்தூரி அனைத்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். எல்லா பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பவர். டிவி விவாத மேடைகளிலும் பங்கேற்று வருபவர்.
சமூக ரீதியிலான பிரச்சினை அனைத்திற்கும் குரல் கொடுக்கும் கஸ்தூரி எட்டுவழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்துள்ளார். அவர்களை போலீஸ் , வருவாய்த்துறை துன்புறுத்துவதையும் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயியும் என் நண்பருமான அருள் மற்றும் சக விவசாயிகளை நிலம் தொடர்பான வருவாய்த்துறை விசாரணை என்று காவல்நிலையத்திற்கு அழைத்து, அதை நம்பி வந்தவர்களை கைது செய்துள்ளார்கள். என்ன நடக்குது நாட்டுல?#atrocity #salemchennaiexpressway pic.twitter.com/wa5pVZIVzQ
— Kasturi Shankar (@KasthuriShankar) September 19, 2018