நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை கிண்லடிப்பதாக கருத்து தெரிவித்து நெட்டிசன்களிடம் நடிகை கஸ்தூரி வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.

பகடி செய்கிறேன் என்கிற பெயரில் பிரபலங்களை பற்றி கருத்து தெரிவித்து அதன் மூலம் பிரபலமாவோம் என்கிற கொள்கையை நீண்ட நாட்களாகவே கஸ்தூரி கடை பிடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் கார்த்தியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதன்பின், எம்.ஜி.ஆர் மற்றும் லதா ஆகியோர் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப மன்னிப்பு கேட்டார். தற்போது கமல்ஹாசனை வம்புக்கு இழுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்னென்ன திட்டங்களை முன்வைக்கிறது என்பதுபற்றி பற்றி கமல்ஹாசன் பிரச்சார விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “பேசறதுதான் புரியலைன்னா, விளம்பரமும் புரியமாட்டேங்குதே!” என்பதுதான் அந்த டிவிட். இந்த டிவிட்டில் அவர் கமல்ஹாசனைத்தான் அவர் கிண்டலடித்துள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.

இதையடுத்து, விளம்பரத்தில் கமல் பேசுவது எங்களுக்கு நன்றாக புரிகிறது. உங்களுக்குத்தான் புரியவில்லை. உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை போல பலரும் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.