சுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருதுபற்றி நடிகை கஸ்தூரி தொடர்ந்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசியதுதான் தற்போது ஹாட் நியூஸ். அவருக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்களும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியிருய்ந்தார். மேலும் “போர் போர்..அக்கப்போர்” என கிண்டலடித்தார்.

இவரின் கருத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மிகவும் காட்டமாகவும் விமர்சித்தனர். ஆனாலும், அதற்கெல்லாம் அஞ்சாமல் தன்னுடையை கருத்தில் உறுதியாக இருக்கிறார் கஸ்தூரி.

சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவர் “ ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நான் கூறவில்லை. இதை அவர் முன்பே செய்திருக்க வேண்டும். பல வருடங்களாக இதையேதான் கூறிக்கொண்டிருக்கிறார். இத்தனை வருடங்களாக மக்களுக்காக எந்த அரசியல் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டதாக தெரியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை ஏத்தி விடுகிறார்களா தெரியவில்லை. அவர்களின் பேச்சை கேட்டு அவர் முடிவெடுக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து” என அவர் தெரிவித்துள்ளார்.