போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் பற்றி நாசுக்காக பேசி வருகிறார். ஏறக்குறைய அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் அரசியல் எண்ட்ரிக்கு சில அரசியல் தலைவர்கள் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது” என அவர் கிண்டலடித்துள்ளார்.

அவரின் கருத்தை சிலர் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.