நான் அப்படி கூறவில்லை – மறுப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி

08:05 காலை

நடிகர் ஒருவர் தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என நடிகை கஸ்தூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Loading...

சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த கஸ்தூரி “ சினிமாவில் நடிகைகள் சில சமயம் புரிந்து கொள்ளாமல் செயல்படுவார்கள். திடீரெனெ சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். முடிவெடுக்க முடியாமல் திணறுவார்கள். சில படங்களில் நடித்த போது அவர்கள் என்னிடம் எதிர்பார்த்த சிலவற்றிற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

எனவே, அந்த பட வாய்ப்புகளை இழந்தேன். தற்போது அரசியல்வாதியாக உள்ள ஒரு நடிகரின் என்னிடம் சிலவற்றை எதிர்பார்த்தார். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கு அது ஈகோ பிரச்சனை ஆகிவிட்டது. எனவே, அந்த படத்தின் வாய்ப்பு மட்டுமில்லாமல், மேலும் 2 படங்களில் இருந்து என் வாய்ப்பை பறித்தார் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கஸ்தூரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் கொடுத்த பேட்டியிலிருந்து சிலவற்றை மட்டும் ஹைலாட்டாக்கி சில இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டு விட்டன. அதில் உண்மையில்லை. வியாபார நோக்கத்திற்காக இப்படி செய்துள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com