கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அவரை வைத்து கலாய்த்து வருகின்றனா். அதுவும் புதிய கட்சியின் பெயர், கொடி, கொள்ளைகளை மதுரை நடத்த பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த கொடி மற்றும் பெயரை வைத்து மீம் கிரியோட்டா்கள் மற்றும் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனா். இவா்கள் இப்படி என்றால் பிரபல நடிகையும் இதற்கு விதி விலக்கல்ல என்பது போல அவரும் கமலின் கட்சியை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

இராமேஸ்வரம் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கட்சி பயணத்தை துவங்கிய கமல் பின் மதுரை நடத்த மாநாட்டில் கட்சியை பெயா் மற்றும் கொடி கொள்கைகளை அறிவித்தார். தன்னுடைய புதிய கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். அந்த கொடியில் ஆறுகைகள் இணைந்து இருப்பது போல நடுவில் நட்சத்திரம் இருப்பது போல உள்ள கட்சி கொடியை அறிவித்தார். இவரது அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலரும் எதிர்ப்பு தெரிவித்து சிலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனா். இதுகுறித்து அரசியல் கட்சித்தலைவா்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனா்.

சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. சிலா் விமா்சித்தும், கலாய்த்தும், கிண்டலும் செய்து வருகின்றனா். அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனா். இந்நிலையில் வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் கமலின் கட்சி பற்றி தனது டிவிட்டா் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். கமலின் கட்சியில் மொத்த பிக்பாஸ் டீமும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஸ்ரீப்ரியா, சினேகன், வையாபுரி உள்பட அனைவரும் இருக்கும் இந்த டீமுக்கு ஸ்பான்சா் விவோ தானனா? மேலும் இந்த பிக்பாஸ் டீமில் எலிமினேஷன் உண்டா? என கிண்டலாக கேட்டுள்ளார்.