விஜய் கருத்துக்கு திடீர் ஆதரவு தெரிவித்த கஸ்தூரி

01:34 மணி

சமீபத்தில் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம்.எங்களுக்குள் எந்த பிரசனைகளும் இல்லையே என பேசினார். இவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் நான் சொன்னதை வேறு அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தருண் விஜய் கூறினார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தருண் விஜய் கூறியதில் என்ன தப்பு?. நமது கருப்பு நிறம் தானே, நாம் என்ன வெள்ளைக்காரர்களா என்ன என்று கேள்வி எழுப்பினார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com