சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும்  நடிகைகளில் கஸ்தூரியும் ஒருவர். இவர் சினிமா பிரச்சினைகள் மட்டுமல்லாது பொது பிரச்சினைகள், அரசியல் டிவி விவாதங்கள் என அனைத்து ரீதியிலும் செயல்பட்டு வருகிறார். ஒரு காலத்தில் மிஸ்மெட்ராஸாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

டுவிட்டர் ,பேஸ்புக் உள்ளிட்டவற்றில் சிறந்த கருத்துக்களை பதிந்து வருகிறார். சமீபத்தில் டுவிட்டரில், ஒரு நபர் உங்களை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள கஸ்தூரி தமிழ்ப்பட டிக்கெட் மொத்தத்தையும் வாங்கிட்டு தியேட்டர்ல தனிமையில் உட்கார்ந்து பாருங்க என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர்  “கவர்ச்சி தப்பு கிடையாது. பாலுணர்வு தவறு கிடையாது. அதற்கென இடம் , சந்தர்ப்பம் சரியாக இருப்பின் . அதுவும் வாழ்க்கையின் ஓர் அங்கம், அதுவே வாழ்க்கை அல்ல. சினிமாவையும் நிஜத்தையும் குழப்பிக்கொள்ள கூடாது என கூறியுள்ளார்