ஜெயக்குமாருடன் வெளியான புகைப்படம்: கஸ்தூரி காட்டமான பதில்

அமைச்சர் ஜெயக்குமாருடன் நடிகை கஸ்தூரி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது அவர் டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூகம், அரசியல் சார்ந்த பல விவகாரங்களுக்கும் அவர் தொடர்ந்து தனது கருத்தினை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கவிஞரும், திமுக ஆதரவாளருமான மனுஷ்யபுத்திரனுடன், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கஸ்தூரி மோத அது பெரும் பரபரப்பை கிளப்பியது. இருவரும் கவிதைகளிலும் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாருடன் சிரித்து பேசும் சில புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. அது உண்மையில்லை எனவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், இதுகுறித்து ஒரு டிவிட்டர் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,பதிலளித்த கஸ்தூரி, அண்ணன் தங்கை பேசுவதையும், அருவருப்பாக சித்தரிக்கும் விஷமிகள் இங்கே இருக்கிறார்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.