சாமி 2 படத்தின் டிரைலரை விமர்சனம் செய்திருந்த பிரபல நடிகை கஸ்தூரியை விக்ரமின் ரசிகர் ஒருவர் வம்பிழுக்க அவர் அந்த நபரை போடா முடிக்கிட்டு என டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த டிரைலரை பற்றி நடிகை கஸ்தூரி அவரது டுவிட்டல் முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா என ட்வீட் செய்து கலாயத்துள்ளார்.

இதனை பார்த்து கடுப்பான விக்ரமின் ரசிகர் ஒருவர் அந்த டுவிட்டில் பதிலடியாக முதல்ல வயசுக்கு ஏத்த மாதிரி படத்துல டான்ஸ் ஆடுங்க என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி அந்த நபருக்கு சூடாக தனது பதிலடியை அதே டுவிட்டரில் கூறியுள்ளார்.

சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு என பதில் ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி.